ஒரு நாள், அமித் ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு ஈ அவன் படிப்பின் நடுவில் வந்துத் தொல்லை செய்தது. தொல்லைத் தாங்காமல், அமித் அந்த புத்தகத்தை சுருட்டி, அந்த ஈயின் பின்னால் அதை கொல்ல ஓடினான். புத்திசாலியான அந்த ஈ, அமித்தின் அப்பாவின் தலையில் போய் உட்கார்ந்தது. அவன் அப்பாவோ, ஒரு கோபக்காரன். அமித், அவன் அப்பா இருப்பதை காணாமல் அவன் அப்பா தலையில் அடித்தான். வலி தாங்காத அவன் அப்பா, அமித்தை நோக்கி அவன் கையிலிருக்கும் புத்தகத்தை வாங்கி, அவனை அடிக்க அவன் பின்னால் துரத்தி ஓடினார். புத்திசாலியான அந்த ஈ, ஐந்து நிமிடத்திர்க்கு பிறகு அதன் வீட்டை நோக்கிப் பறந்தது.
No comments:
Post a Comment