நான் ஒரு சாகசிகமான புத்தகம் ஒன்றை படித்தேன். அப் புத்தகத்தின் பெயர்,
‘தி ஃபேமஸ் ஃபைவ்’. நான் அதன் முதல் புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன். இப்போது நான் அதை பற்றி ஒரு கட்டுரை
எழுதப் போகிறேன்.
கதாப்பாத்திரங்கள்.
ஜூலியன் –
ஜூலியன்
ஒரு
12 வயது சிறுவன். அவன் ஒரு நல்ல சிறுவன். அவன் இருக்கும்போது யாராலையும் முகத்தை
தூக்கி வைக்க முடியாது.
டிக் – டிக் ஒரு 11 வயது சிறுவன். அவன் ஜூலியனின் தம்பி. அவனும் அவன் அண்ணனை போலவே தான், நல்ல மற்றும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் சிறுவன்.
ஆனீ – ஆனீ ஒரு 10 வயது சிறுமி. அவள் ஜூலியனுக்கும் டிக்குக்கும் தங்கை. அவள் ஒரு கூச்சமான சிறுமி. அவள் சாகசிகங்களுக்கெல்லாம் பயப்படுவாள்.
ஜோர்ஜீனா – ஜோர்ஜீனா ஒரு 11 வயது சிறுமி. அவள் தான் ஜூலியன், டிக் மற்றும் ஆனீயின் ஒரே சகோதரி
(cousin). அவள்
ஒரு தெறியாட்டப்பெண் (tomboy).
அவளுக்கு
டிமோதி என்று ஒரு நாய் உள்ளது. அதை அவள் செல்லமாக
டிம் என்றும் டிம்மி என்றும் அழைப்பாள். அவள் ஒரு சளிக்கும், கோபமான பெண். யாராவது அவள் அன்பு டிம்மை அவமதித்தால்,
அவள் கோபமாகி, அவிமதிப்பவரை நன்றாக திட்டிவிடுவாள். அவள் தான் கிர்ரின் ஐலாண்டையும்
கிர்ரின் அரண்மனையையும் உரிமையாளர் (அவள் உரிமையாளர் அல்ல, ஆனால் அவள் அதை அவளுடையது
என்று கூறுவாள்.) அவளுக்கு
பெண்ணாக இருப்பதை விட ஆணாக இருக்கத் தான் மிகவும் பிடிக்கும். அவள் அவளுடைய முடியை ஒரு பையன்னை
போல சிறிதாக வெட்டியிருக்கிறாள். அவள் நன்றாக
ஒரு பையன்னைப் போலவும் அவனை விடவும் நன்றாக நீந்துவாள். எல்லாரும் அவளை ஜோர்ஜ் என்று தான்
அழைப்பார்கள், ஏனெனில் அவளை ஜோர்ஜீனா என்று அழைத்தால், அவள் பேசமாட்டாள்.
அத்தை ஃபானீ – ஃபானீ
தான் ஜூலியன், டிக் மற்றும் ஆனீயின் அத்தை மற்றும் ஜோர்ஜின் அம்மா. அவள் அனைவரிடமும் நன்றாக மற்றும்
மெதுவாகப் பேசுவாள். நான்கு
குழந்தைகளுக்கும் அவளை மிகவும் பிடிக்கும்
மாமா குவெண்டின் – குவெண்டின்
தான் ஜூலியன், டிக் மற்றும் ஆனீயின் மாமா மற்றும் ஜோர்ஜின் அப்பா. அவர் ஒரு ஆராய்ட்ச்சியாளர். அவர் காலை உணவு, மத்திய உணவு, சிற்றுண்டி மற்றும்
இரவு உணவு நேரங்களில் மட்டும் தான் அவருடைய அறையிலிருந்து அவர் வெளியே வருவார். அவர் ஜோர்ஜைப் போல எப்பொழுதும்
சளித்துக் கொண்டே இருப்பார். அவர் மிக உயரமாக இருப்பார். அவருடைய முகத்தில் ஒரு பெரிய கோபமடை இருக்கும். அவரும் ஜோர்ஜும் சிரித்தால் மிக
அழகாக இருப்பர், ஆனால் சளித்தால் கேவலமாக இருப்பர்.
இயல் – 1
இப் புத்தகத்தின் முதல் இயலின் பெயர் ‘அ க்ரேட் சர்ப்ரைஸ்’. இதில் ஜூலியன், டிக் மற்றும் ஆனீ அவர்கள் பள்ளி விடுமுறை
நாட்களில் எங்கு போனார்கள் என்பதைப் பற்றியது. ஒரு நாள் ஆனீ அவள் அம்மாவிடம் கேட்டாள்,
‘அம்மா, விடுமுறை காலத்தில் எங்கு போலாமென்று முடிவு
செய்து விட்டீர்கள்?’’ உடனே, ஜூலியன் கூறினான், “அம்மா,
நாம் பொல்ஸீத்திற்க்குப் பொய் விடலாமா?” பொல்ஸீத் என்ற இடத்தில் தான் அவருடைய
பண்ணை வீடு இருக்கிறது. அப்போது, அவர் அம்மா கூறினாள்,”இல்லை, இப்போது நாம் அங்கே செல்ல மாட்டோம். உண்மையாக, நானும்
அப்பாவும் ஃப்ரேன்ஸுக்கு போகிறோம்.
நாங்கள் நினைத்தோம் நீங்கள் தனியாகச் சென்றால் நன்றாக இருக்குமென்று. இப்போது, நீங்கள்
பெரிதாகி விட்டீர்கள். அதனால், நீங்கள் தனியாக செல்ல வேண்டும்.” அப்போது அப்பாவுக்கு ஒரு யோசனை வந்த்து. அவர் சொன்னார், ‘குழந்தைகளெல்லாம் என் தம்பி குவெண்டின் வீட்டிற்கு சென்றால் என்ன?” அப்போது, அவர்
அம்மா கோபமாக சொன்னார், ‘உங்களுக்கு எப்படி அவரைப் பற்றி ஞாபகம்
வந்தது?’ அப்போது,
அப்பா சொன்னார், ‘அது வந்து, நான் ஃபேனீயை அங்காடியில் பார்த்தேன். அப்போது, நாங்கள்
சிறிது நேரம் பேசினோம். அவள் அப்போது சொன்னாள், ‘என் மகள் ஜோர்ஜ் ஒரு தனி சிறுமி. அதனால், உங்கள்
குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம் வரும்போது, அவர்களை என் வீட்டிற்கு
அழைத்து வாருங்கள். நான் அவர் கூச்சமிடாமல், குவெண்டினின் அறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.’ என்றாள். அதனால்
தான் நான் அப்படி சொன்னேன்’. அப்போது, ஜூலியன் கூறினான்,’ஏங்களுக்கு
தெரியாத ஒரு சகோதரியா? அவள் பெயர் என்ன?’ அப்போது அம்மா கூறினாள்,’ஜோர்ஜீனா. ஆனால், அவளை
நீங்கள் ஜோர்ஜ் என்று தான் அழைக்க வேண்டும், ஏனெனில்,
அவளை ஜோர்ஜீனா என்று அழைத்தால், கோபம் வந்து விடும். சரி, இப்போது,
இவ் விடுமுறைக் காலத்திற்கு, நீங்கள் உங்கள் மாமா
குவெண்டினின் வீட்டிற்கு தான் செல்லப் போகிறீர்கள்’.
விடுமுறை காலம் வந்தது. அவர்கள், அவருக்குத்
தேவையானவற்றை எடுத்துக் காரில் போட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு,
அவர்கள் கிளம்பிவிட்டார்கள். சீக்கிரமாகவே, அவர்கள் மாமா குவெண்டினின் விட்டில் போய்சேர்ந்து விட்டார்கள். அவருடைய வீட்டின் பெயர் கிர்ரின்
கொட்டேஜ். அது கிர்ரின்
பேயில் இருக்கிறது. அம் மூன்று குழந்தைகள்
அவர்களின் சாமான்களை எடுத்து அவர்கள் அப்பா, அம்மா இருவரிடமும் பை – பை சொல்லிவிட்டு.,
வீட்டின் உள்ளே ஏறினார்கள்.
******************************************************
******************************************************