பகுதி 1
======
இக் கதையை
விஷ்ணுபுரம் சரவணன் அங்கிள் தான் எழுதினாரு. இந்த கதை எப்படி என்றால் வானவன் என்று
ஓர் ராஜாவுக்கு காவலாளிகளும் வேலைக்காரர்களும் வாத்து ராஜா என்று பட்டப்பெயர் இட்டார்கள்
ஏனென்றால் அந்த ராஜா ஒரு முட்டாள்.
பறவைகளில் வாத்து தான் மிக முட்டாள். அதனால் இந்த பெயரை வைத்தார். நான் இந்த புத்தகம் பற்றி ஒரு சிறிய
கட்டுரை எழுதப் போகிறேன்.
அமுதா
என்று ஒரு சிறுமியிருந்தாள். அவள் அப்பா, அம்மா, அவள், அண்ணன் மற்றும் பாட்டி
ஒரு குடும்பம். எப்போதும்
அவள் கூடே இருப்பவள் கீர்த்தனா. அவர் இரண்டு பேரும் ஒரே ச்கூளில் தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு சுடுகாய் பொறுக்குறது
ரொம்பவும் பிடிக்கும். ச்கூள் ஆரம்பிக்கர பெல் அடிக்கர முன்னாடி சுடுகாயை பொறுக்கி பகத்துல இருக்கிற
ஆத்துல தூக்கிப்போட்டுட்டு வகுப்பறைக்கு போவார்கள். ஏன் தூக்கிப்போடுகிறார்கள் என்றால்,
அமுதாவின் நண்பன் விக்கி பேசிகிட்டே இருக்கிரப்போ நைஸா சுடுகாய எடுத்து
அமுத கைல தேச்சு விட்டான். கை பயங்கரமாக எரிந்த்து. அமுத உடனே போய் ராமு ஸார் கிட்ட போய் சொல்லீட்டா. ராமு ஸார் விக்கியை நன்றாக அடித்தார். அன்றிலிருந்து தான் இப்படி பண்ணுகிறார்கள். ராமு ஸாரையும் அவர்க்கு ரொம்பவும்
பிடிக்கும்.
ஒரு நாள், அவள் வகுப்பில் ராணி டீச்சர்
வந்தாங்க. அவர் அமுதா
ஹோம்வர்க் பண்ணிகிட்டு வந்தாளானு பார்க்க அவகிட்ட, “அமுதா,
உன் ச்லேட்டு குடு. நீ ஹோம்வர்க் பண்ணீட்டியானு நான் பாக்கணும்,” என்று கேட்டார். ஆனால் அவள் ச்லேட்டை பர்தப்போ,
அவள் முட்டைக்குள் பூவை வரைந்து வச்சிருந்தாள். “நீ ஏன் முட்டைக்குள்ள பூ வரஞ்சு
வச்சிருக்க,” என்று ராணி டீச்சர் கேட்டப்போ, அமுதா வாயை திறக்கவில்லை. கிர்த்தனா கிட்ட ச்லேட்டு கேட்டப்போ, அவளும்,
அமுதா வரைந்த்து மாதிரியே வரைந்திருந்தாள். அதனால, ரெண்டு
பேரையும் வகுப்புக்கு வெளிய முட்டிபோட சொன்னாங்க ராணி டீச்சர். அவங வெளிய முட்டிபோட்டு உட்கார்ந்தப்போ,
யாரோ பேசறது மாதிரி சத்தம் கேட்டது. அவங்க பயந்து பொய்ட்டாங்க. அப்போ பாத்தா பேசறது யாரு தெரியுமா
? ஒரு அணில் தான் அவங்க கிட்ட
பேசீடிச்சு.
அந்த அணில், “ஏன் நீங்க வெளிய முட்டிப்போட்டுட்டு
உட்கார்ரீங்க?,” என்று கேட்டது. அப்போ அமுதா, அவளுடைய ச்லேட்டை காட்டி, “இதோ பார், நாங்க ஒரு கதை கேட்ட்திலேந்து, எங்களுக்கு எல்லாமே,
வாத்து முட்டைக்குள்ள பூ மாதிரி தெரியுது. அதனாலதான், ஹோம்ர்க்கை இப்படி செஞ்சிட்டோம்,”என்று சொன்னாள். அப்போது அணில், “அது என்ன கதை? எனக்கும் கேக்க ஆசையா இருக்கு, கொஞ்சம் சொல்லேன்
?,” என்று கேட்டது. அப்போது, அமுதா, ”இப்ப சொன்னா டீச்சர்
திட்டுவாங்க. அப்றமா
சொல்றேன்,” என்று சொன்னாள்.
அப்ப அணில், “சரி, நீங்க மத்தியானம் சாப்பிட போவீங்க, தானே ? அப்ப
அதொ, அந்த கொய்யா மரத்தில நான் இருப்பேன். அங்க வந்து சொல்லு,” என்று சொன்னது.
அப்போ, மத்தியான சாப்பாடு பெல்
அடிச்சப்போ, அமுதவும், கீர்த்தனாவும்,
அந்த கொய்யா மரத்துக்கிட்ட போனாங்க. அந்த அணில், அங்கேருந்து இருவர்க்கும், ஆளுக்கு ஆளுக்கு ஒரு கொய்யா
பழம் கொடுத்தது.
அப்போ, கீர்த்தனா, “அமுதாருக்கு தான் அவள் பாட்டி சொல்லற மதிரியெ கதை சொல்ல தெரியும். அதனாச் அவ சொல்லுவா !,”என்று சொன்னாள். அமுதா ஆரம்பித்துவிட்டாள்.
“ஒரு ஊர்ல, ஒரு ராஜா இருந்தாரு. அவரு அவரோட நாட்ட ஆட்ச்சி பண்ணும்போ,
எல்லாரும் நல்லா இருந்தாங்க. அந்த ராஜாவுக்கு 3 பிள்ளைகள். முதல்வன்
பெயர் தேசிங்கு, இரண்டாத்தவன் பெயர் கலிங்கன் மற்றும் மூன்றாமத்தவன்
பெயர் வானவன். தெசிங்குவும்
கலிங்கனும் புத்திசாலிகள். ஆனால், வானவன் மட்டும் முட்டாள். அவன் கிட்டே மக்கள் சரியானது சொல்கிறார்களோ,
தவறானது சொல்கிறார்களோ, எல்லாத்துக்கும் ஆமாம்
அல்லது சரி என்று சொல்லிவிடுவான். அப்போது,
பெரிய ராஜா, “மகன்களே, நான் வயதாகி விட்டேன்.
அத்னால், நான் என் மூத்த மகன் தேசிங்குவை ராஜாவாக்க தயாராகிவிட்டேன்,” என்று
சொன்னார். ஆனால், மூவரும் சண்டையிட்டார்கள். அதனால், பெரிய ராஜா, நாட்டை மூன்றாக பிரித்து, மூவருக்கும்
கொடுத்தார். “நான் ஆட்சி செய்த வரைக்கும்,
இந் நாட்டிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
அதுபோல, நீங்களும் உங்கள் நாட்டை நன்றாக ஆட்ச்சி செய்யவேண்டும் என்று சொன்னார்.