பகுதி 3
அப்போது வானவன் ராஜாவுக்கு கோபம் வந்து அவர் அவருடைய அரண்மனைக்கே சென்றுவிட்டார். அரண்மனைக்குச் சென்று, அவரின் படைவீரர்கள் கிட்டே ஊரில் உள்ள எல்லா வாத்துகளையும் கொல்ல ஆணையிட்டார்.
அப்போது சுந்தரி என்றொரு பெண் அவள் பாட்டி கூடே ஒரு குடிசையில் வசித்திருந்தாள். அவள் பாட்டி, கிழங்கு விற்க போவார். அப்போது, ஒரு நாள் சுந்தரியும் அவள் பாட்டி கூடே போனாள். வழியில், ஒரு தண்டோராக்காரர் தண்டோராவை அடித்துக்கொண்டு, “அரசர் நாட்டில் இருக்கிற எலா வாத்துகளையும் கொல்ல ஆணையிடார்,” என்று கத்திக்கொண்டே அடுத்த ஊருக்கு சென்றார். அப்போது சுந்தரி அவள் வாழும் குடிசைக்கு ஓடிச் சென்று தன் வாத்துகளை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது, அடுத்த வீட்டில் இருக்கும் மீனா அக்கா அவள் குடிசைக்குள் வந்தாள். அப்போது, தூரத்தில் படைவீரர்களின் குதிரை சத்தம் கேட்டது. அப்போது, பாட்டி இரண்டு பேருக்கும் கிழங்கு சமைக்க சென்றிருந்தாள்.
அப்போது, மீனாவுக்கு ஒரு யோசனை வந்தது. துணி துவைக்கும் தாத்தா கிட்டே போய், “தாத்தா, எங்களுக்கு உங்கள் கிட்டே இருக்கிற மை புட்டியைக் கொஞ்சம் என் கிட்டே குடுங்களேன். சிறிது நேரத்தில் திருப்பிக் குடுத்துடுவோம்,” என்று மீனா சொன்னாள்.
அந்த மை புட்டியை மீனா எடுத்துக் கொண்டு, மீனாவும் சுந்தரியும் வாத்துகள் மேல் பூ பூவாக வரைந்து வைத்தார்கள். அடுத்த நாள், படைவீரர்கள் சுந்தரியின் வீட்டில் வாத்துகளை கொல்பதர்க்காக வந்தப்போது, அவள் அவளின் பூ வாத்துகளை காண்பித்தாள். அப்போது, படைவீரர்கள்,
“இது வாத்தாயிருந்தால், நளைக்கு இது போடும் முட்டையை கான்பிப்பீர்,” என்று சொல்லி சென்று விட்டார். மீனாவும் சுந்தரியும் பாட்டியும் பயந்துப் போய் அவர் வீட்டில் உட்கார்ந்தார்.
No comments:
Post a Comment