இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்களுடைய பெயர்கள் தியா மற்றும் தாரா. ஒரு நாள் அவருடைய ஒரு நாடகப் போட்டியை அறிவித்தார். அதன் தலைப்பு ‘நட்பு’ ஆகும். அந்த இரவு, தாரா தூங்கும்போது, அவளுக்கு ஒரு கனவு வந்தது. அக் கனவு அவர் இருவருடைய சென்ற பிறவியைப் பற்றியது. அதில் அவர்கள் இருவரும் அமேரிக்கர்கள். அவர்கள் ஓர் அமேரிக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இப் பிறவி போல அவர்களுடைய ஆசிரியர் ஒரு நாடகப் போட்டியை அறிவிக்கிறார். அடுத்த நாள், தாரா இதைப் பற்றி தியாவிடம் கூறினாள். என்ன ஒரு ஆச்சரியம்! தியாவுக்கும் அதே கனவு தான் உண்டானது. அதனால், அவர்களது குழுவினரோடு இதைப் பற்றிப் பேசினர். போட்டி அன்றூ, அவர்கள் இந்த நாடகத்தை நடித்து முதல் பரிசு பெற்றனர். என்ன ஒரு கனவு! தியாவும் தாராவும் அக் கனவை எந்நாளும் மறக்கவே மாட்டார்கள்!
No comments:
Post a Comment