நான் நிலாவை பற்றி ஓர் கவிதை எழுதப் போகிறேன். அதை தயவு செய்து வாசியுங்கள்.
“நான் தான் நிலா,
நான் போவேன் வானில் உலா.
எனக்கு உணவு கிடையாது,
சூரியன் என்னோடு இணங்காது.
எனக்கு குடிக்க ஆசையாக இருக்கிறது தேனை,
எனக்கு சந்திக்க ஆசையாக இருக்கிறது மானை.
சில மனிதர்கள் என்னை சந்திக்க வருவார்கள்.
அவர்கள் என்மேல் நடப்பார்கள்.”
அன்பின் சைதன்யா
ReplyDeleteஅடேங்கப்பா...மலைத்துப் போனேன்....என்ன வியப்பு! ஆங்கிலத்தில்தான் ரைம் பிசகாது அழகாக எழுத வருகிறது என்றால், தமிழில் எழுதியிருக்கும் நிலா கவிதை ஆஹா...ஆஹா..எதுகையும், மோனையும் ஜதி போட்டுக் கொஞ்ச ஓர் அழகு நர்த்தனம் புரிகின்றது இலக்கணம் உனது கையில்....வாழ்த்துக்கள்...
உலா போகும் நிலா அழகு....சந்திக்க வரும் மனிதர்கள் என் மேல் நடப்பார்கள் என்ற வரி எத்தனை புதிய பார்வையை முன் வைக்கிறது....அது சமூகத்தில் மனிதர்கள் குறித்த பார்வையாகவும் எப்படி வந்து விழுகிறது!
வாழ்த்துக்கள் சைதன்யா....
எஸ் வி வேணுகோபாலன்
Thank you, uncle!
ReplyDelete