Tuesday, January 21, 2014

102. சூரியன்.


   நான் சூரியனைப் பற்றி ஓர் கவிதை எழுதப் போகிறேன்.  தயவு செய்து அதை வாசியுங்கள்.

சூரியன் பிரகாசமானவன் - அவன்
நெருப்பின் பந்து ஆவான்.
பகலில் வெளிச்சம் கொடுப்பான் - அவன்
அல்லில் எங்கெயோ மறைவான்.

நாம் அவன்கிட்டே செல்லக் கூடாது - சென்றால்,
நாம் கரிந்துவிடுவோம் நன்றாக.
சூரியனும் வருத்தமாக இருக்கிறான் - யாரும்
அவன்கிட்டே வரவில்லை என்று.

அவனை பகலில் நம் வீட்டிலிருந்து பார்த்தால் கண் கூசும் - அவனை
சாயுங்காலம் பார்த்தால் அவன் மறைவதை காணலாம்.
அவன் மேல் நெருப்புப் பத்திக்கொண்டிருக்கிறது - அவன்
அவ்வளவு சக்த்தியானவன்.

சூரியன் உருண்டையாக இருப்பான் - அவன்
பார்க்க அப்படியே ஆரஞ்சு பழம் போலவே இருப்பான்.
மழை வந்துவிட்டால் அவன் மேகங்களால் மறைந்துவிடுவான் - அவன்
மழை இல்லாத நேரம் பிர்காசைத்துக் கொண்டேயிருப்பான்.

2 comments:

  1. சூரியன் கவிதை, உனது அடுத்த கட்ட எழுத்துத் திறமையை, கற்பனையை, பார்வையை வெளிப்படுத்துகிறது. சூரியன் கவிதை, அதற்குள்ள அளவற்ற சக்தியை வணங்குகிறது...வாழ்த்தி மகிழ்கிறது.
    சூரியனுக்கு வருத்தம், நாம் அருகே செல்லவில்லை என்று எழுதி இருக்கும் இடம் அழகு....

    வாழ்த்துக்கள்

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete