Monday, March 18, 2013

6. Krishna Mama's letter

 How did nose come in-between the eyes?
Long ago the human beings had their nose in their forehead. One day a boy named Ryan went across a pond. There he saw some bright lotus. When he plucked a lotus, suddenly, the lotus changed into a fairy. The fairy asked  to the boy “ What is your wish ?” The boy said, “ I want some gold ”. The fairy gave some gold and went away. After that it was night. When Ryan sleeping some thieves came into his house and took the gold, and they cut the boy’s nose and went away. The next day when Ryan woke up, he saw that his nose was cut. He went and prayed to the God that, “ I want my nose in between my eyes, so that I can see whether some one is staling my nose “ . God heard his prayer and gave another nose in-between his eyes. From that day only all the human beings have their nose in-between their eyes.


 மூக்கு எவ்வாறு கண்களுக்கு இடையில் வந்தது ?

முன்பொரு காலத்தில் மனிதர்களுக்கு நெற்றியில் தான் அவர்களின் மூக்கு இருந்தது . ஒரு நாள் ரயான் என்ற பைய்யன் ஒரு குளத்தைக் கடந்து போனான் . அதில் ஒரு பிரகாசமான தாமரையைப் பார்த்தான் . அவன் அதைப் பறித்த போது  , திடீரென அந்த தாமரை ஒரு தேவதையானது. அந்த தேவதை அந்தப் பையனைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ?" என்றது , அதற்கு அந்தப் பைய்யன் "எனக்கு கொஞ்சம் தங்கம் வேண்டும்" என்றான் . அவனுக்கு சிறிது தங்கத்தைக் கொடுத்து விட்டு , அந்த தேவதை மறைந்தது. அதன் பிறகு இரவானது.   ரயான் தூங்கிக் கொண்டிருக்கும் போது சில திருடர்கள் அவனது வீட்டுக்கு வந்து அவனது தங்கத்தை எடுத்துக் கொண்டனர் , அவனது மூக்கையும் வெட்டி விட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை  ரயான் எழுந்து பார்த்த போது அவனது மூக்கு வெட்டப் பட்டிருந்தது  (மூக்கை காணவில்லை) . அவன் கடவுளிடத்து  போய்  வேண்டினான்              " எனக்கு எனது மூக்கு எனது கண்களுக்கிடையே இருக்க வேண்டும் , அப்போது தான் யாராவது எனது மூக்கை திருடும் போது   நான் பார்க்க முடியும்" கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றது , அவனுக்கு மற்றொரு மூக்கை அவனது கண்களுக்கு இடையில் தந்தது . அந்த நாளில் இருந்து தான் எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் மூக்கு கண்களுக்கு இடையே கிடைத்தது .        





அன்புள்ள சைதன்யாவுக்கு ,

அனேகமாக இவ்வயதில் மொழிபெயர்த்ததும்  சொந்தமாகப் படைத்ததும்  தமிழகத்தின் முதல் எழுத்தாளராக நீ இருக்கலாம் , நான் கடிதம் எழுதும் முதல் வாசகன் ஆக  இருக்கிறேன் . இறுதியான  உனது  3 சொந்தக் கதைகளில் , எனக்கு முதல் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆகவே உனது கதையை நான் மொழி பெயர்த்துள்ளேன் . அது முதல் மொழி பெயர்ப்பு ஆகுக . மூக்கு கண்களுக்குக் கீழே கிடைப்பது நல்ல கற்பனை.

கதைகளை எழுதுவாய் , அப்போது தானாக மேலும் கதைகளைப் பெறுவாய்.

No comments:

Post a Comment